மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மமக-வின் 17ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நகரம் முழுவதும் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று 18/01/25 சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மமக நகர தலைவர் முகமது அஸ்லம் தலைமை வகித்தார். மமக மாவட்ட தலைவர் இதிரிஸ் அஹமது, மாவட்ட செயலாளர் அப்துல் பஹத், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட துணை செயலாளர் பரோஸ்கான், மமக மாவட்ட துணை செயலாளர் இலியாஸ், மமக நகர செயலாளர் சகுபர் சாதிக், தமுமுக நகர செயலாளர் ஹாஜா முகைதீன், மமக நகர பொருளாளர் முகமது யூசுப் மற்றும் நகர துணை, அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மமக மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா, அதிரை நகரம் முழுவதும் மமக கொடியேற்றி சிறப்பித்தார். இந்நிகழ்வில் மமக மற்றும் தமுமுக-வினர் பலர் பங்கேற்றனர்.







