இந்த ஆண்டின் முதல் ஜல்லிகட்டுப் போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.
ஜல்லிகட்டு போட்டிக்கு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டி களைகட்டியது.
இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.
இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீர்ர்கள் பங்கேற்று காளைகளை அடக்க முயன்றனர்.