இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதலின்படி அதில் ஒரு முக்கிய அம்சமாய் இருக்கும் ஜக்காத் குறித்து பெரும்பாலான மக்களுக்கு சந்தேகமும் குழப்பமும் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த சந்தேகம் குழப்பம் குறித்து தெளிவு கிடைக்க தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18.02.2025 செவ்வாய்க்கிழமை அன்று அதிரை செக்கடிப் பள்ளிவாசலில் ஜகாத் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
குறிப்பாக ஜகாத் கொடுக்க தகுதியானவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஜகாத் சம்பந்தமான சட்டங்களை அறிந்து தெளிவு பெறும்படி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அழைப்புவிடுத்துள்ளது.
குறிப்பு : உங்களுக்கு ஜகாத் குறித்தான சந்தேகங்களை தனித் தாளில் எழுதி கேட்கலாம்.

