அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை !
அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB அபூபக்கர்.
தற்போது TTV தினகரன் அணியான, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகியாக இருக்கிறார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிராம்பட்டினத்தில் இயங்கும் வக்ஃப் நிலம்,தொடர்பாக ஒரு புகார் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட உயர் மட்டத்திற்கு அனுப்பி இருக்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் அனுப்பிய கடிதம் அவர் முன்னாள் பயணித்த, அதிமுகவின் லட்டர் பேடை பயனடுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அதிமுக நகர நிர்வாகமும் மொளனம் சாதிக்கிறது, அவரின் கடிதத்தை மேற்கோள் காட்டி பாஜவின் ஆதரவு ஊடகமான ஸ்ரீடிவி விவதாகமாகவே ஒளிபரப்பியது.
இது அதிரை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமமுகவின் அபூபக்கர், உள்நோக்கத்துடன் அதிமுகவின் கடிதத்தை பயன்படுத்தி இருக்கிறார் என அதிமுகவினர் குமுறுகிறார்கள்.
இதுகுறித்து அதிமுகவின் அதிரை நகர செயலாளர் பிச்சையை தொடர்பு கொண்டு பேசிய போது, அரசியல் நாகரிகமற்ற செயல்.இது என்றும் அவர் அளித்திருக்கும் புகாருக்கும் அதிமுகவில் அதிமுகவுக்கும் தொடர்பில்லை என கூறினார் மேலும் பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதிலளித்த திரு பிச்சை வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக அறிவிப்போம் என்றார்