மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் தியாகி முஸ்தபா ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஜின்னா அவர்களின் மருமகனும், மர்ஹூம் யாக்கத் அலி, மர்ஹூம் சரபுதீன், ஹைதர் அலி, ரசீத், பசிர் ஆகியோரின் சகோதரரும், சாகுல் ஹமீது அவர்களின் மச்சானும், ஜெகபர் சாதிக், முகமது மீராசா ஆகியோரின் மாமனாரும், ஹக்கீம், நவாஸ்கான், ஹபீபு ரஹ்மான், அன்சாரி, அம்ஜத்துகான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஜலீல் அவர்கள் நேற்றிரவு (04/03/25) மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(05/03/25) அஸர் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.