தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சென்னை தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்ல கூடிய பாம்பன் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலுக்கான நிறுத்தம் அதிராம்பட்டினத்தில் இல்லாததால் அருகில் இருக்கும் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்த ரயில் நள்ளிரவு 01:08Am மணிக்கு பட்டுக்கோட்டை வந்தடைகிறது. அந்தசமயத்தில் பொது போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வருகைக்கு ஏற்றவாறு பட்டுக்கோட்டையிலிருந்து நள்ளிரவு அதிராம்பட்டினத்திற்கு தினசரி சிறப்பு பேருந்து இன்று (12/05/25) திங்கட்கிழமை நள்ளிரவு 1:15 மணியளவில் இயங்க உள்ளது.
எனவே சென்னையிலிருந்து பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் பயணிகள் இந்த பேருந்தை பயன்படுத்திக் கொள்ளவும்.