அதிராம்பட்டினம் அருகேயுள்ள மாளியக்காடு இருப்பு பாதையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார், விசாரனைக்கு பின்னர் சடலத்தை ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் வசம் ஒப்படைத்தனர்.
உடலை பெற்றுக்கொண்ட அவர்கள் சட்ட விதிகளை பின்பற்றி அதிராம்பட்டினம் பொது மயானத்தில் இந்து முறைப்படி அடக்கம் செய்தனர். ஐமுமுக-வினரின் இந்த மனிதநேயமிக்க செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
