மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது தலைமை வகித்தார். கட்சியின் துணை பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் தமுமுக மற்றும் மமக-வின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி தமுமுக மற்றும் மமக-வின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் மதுக்கூர் புரோஸ்கான் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமுமுக மற்றும் மமக-வின் மாவட்ட பொருளாளராக பட்டுக்கோட்டை ஜஹபர் அலி, மமக மாவட்ட செயலாளராக மல்லிப்பட்டினம் அப்துல் பஹத், தமுமுக மாவட்ட செயலாளராக அதிரை இத்ரீஸ் அஹமத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

