மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். அ.மு. அப்துல் மஜீத் அவர்களின் மகனும், மர்ஹும். அ.மு. ஷேக் மதினா அவர்களின் மருமகனும், மர்ஹும். அ.மு. ஹாஜா அலாவுதீன், மர்ஹும். அ.மு. அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தம்பியும், அ.மு. ஜபருல்லா அவர்களின் மச்சானும், ஜஹாங்கீர், ஜாஹிர் மற்றும் ஜவாஹிர் ஆகியோரின் மாமாவும், ஹாஜா நசுருதீன் மற்றும் செய்யது அபுதாஹிர் ஆகியோரின் தகப்பனாருமாகிய அ.மு. முகம்மது சேக்காதி அவர்கள் இன்று அதிகாலை கீழத்தெரு காட்டுப்பள்ளி இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.