Sunday, April 12, 2026

அதிரை SSMG கால்பந்து தொடர் : காலிறுதி சுற்று வாய்ப்பை இழந்தது அதிரை ROYAL FC..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இத்தொடர் போட்டி முக்கிய சுற்றுகளை எட்டி வரும் நிலையில், இன்று இத்தொடரின் 24 போட்டியில் கோயம்புத்தூர் (கரம்பயம்) – அதிரை ROYAL FC அணிகள் மோதினர்.

இப்போட்டியில் வென்றால் காலிறுதியில் நுழைந்து விடலாம் என்கிற உத்வேகத்துடன் களம் கண்ட அதிரை ROYAL FC அணிக்கு ஏற்றார் போல கோவை கரம்பயம் அணியும் தங்களது ஆட்டதிறன்களை அவ்வப்போது மாற்றி அமைத்ததன் பலனாக கோவை கரம்பயம் அணி முதல் கோலை பதிவு செய்து முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்ட அதிரை ROYAL FC அணியின் கூட்டு முயற்சியின் விளைவாக கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது முதல் கோலை பதிவு செய்து 1 – 1 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன் செய்த ஆறுதல் அடைவதற்குள், கோவை கரம்பயம் அணியும் அடுத்தடுத்து 2 கோல் அடித்து 3 – 1 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று அதிரை ROYAL FC அணியின் காலிறுதி கனவை கலைத்தது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி: சுயேட்சை வேட்பாளர் கத்தரிக்கோல் சின்னத்தில் களம் காணும் ஜியாவுதீன்!

பட்டுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பட்டுக்கோட்டை தொகுதியில் களம் காணும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,...

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!

பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...
spot_imgspot_imgspot_imgspot_img