அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர் 17 வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், கடந்த 14.06.2025 அன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் போட்டி துவங்கியது.
இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கு கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர்.
இதில் இறுதிப்போட்டிக்கு அதிரை சிட்னி – பாளையன்கோட்டை அணிகள் தகுதி பெற்று இன்று 16.06.2025 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு இறுதி போட்டி துவங்கியது.
முன்னதாக இப்போட்டியை அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் பேராசிரியர் அப்துல் காதர், துணைத் தலைவர் சரபுதீன், அதிரை நகர முன்னால் சேர்மன் திமுக மேற்கு பொறுப்பாளர் S.H.அஸ்லம், IMMK அதிரை நகர பொறுப்பாளர் அஹமது ஹாஜா மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
டாஸ் வென்ற அதிரை சிட்னி (SFCC) அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இன்னிங்ஸை தொடங்கிய பாளையன்கோட்டை அணி 8 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் குவித்தது.
48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அதிரை சிட்னி அணி 8 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் மட்டுமே குவித்தால், 29 ரன்கள் வித்தியாசத்தில் பாளையன்கோட்டை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
முதல்பரிசு பெற்ற பாளையன்கோட்டை அணிக்கு வெற்றிக்கோப்பையுடன் 25ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.


