தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு அரசு மருத்துவ துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு குருதிக் கொடையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.
இதில் அதிரையைச் சேர்ந்த சேக் ஜலாலுதீன் மகன் முகம்மது ரிஸ்வானுதீன் 53 முறை இரத்ததானம் செய்தமைக்காக சிறந்த குருதிக் கொடையளர் விருதை பெற்றார்.

