அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பிரதான சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளார்கள். அதிரையில் இருந்து பல ஊருகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் சீராக இருந்தாலும் சாலையின் ஓரங்களில் இருபுறமும் மணல்கள் அதிகமாக ஒதுங்கி இருக்கின்றது.
இதன் முதற்கட்டமாக இன்று(04-01-2018) வியாழக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் அதிரை சாலையில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் அறிவுறுத்தலின் பேரில் மற்றும் சுகாதார ஆய்வாளர் கே. அன்பரசன், துப்புரவுப் பணி கண்காணிப்பாளர் முத்துகுமார் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் 15 க்கும் மேற்பட்டோர் இருபுறமும் குவிந்து காணப்படும் மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.