Friday, January 23, 2026

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் – செங்கோட்டை மற்றும் தாம்பரம் – ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

​தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இந்த இரண்டு ரயில் நிலையங்களும் ஆயிரக்கணக்கான பயணிகள் அன்றாடம் பயன்படுத்தி வரும் முக்கிய நிலையங்களாகும். தென்மாவட்டங்களுக்குச் செல்லும் இந்தப் பிரபலமான விரைவு ரயில்கள் இங்கு நின்று சென்றால், மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும், இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை இது என்றும் எம்.பி. ச.முரசொலி அவர்கள் ரயில்வே அமைச்சரிடம் விளக்கினார்.

பொதுமக்களின் நலன் கருதி, தாம்பரம் – செங்கோட்டை மற்றும் தாம்பரம் – ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும் அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ரயில் நிலையங்களில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள், எம்.பி.யின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதியளித்தாக கூறப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....
spot_imgspot_imgspot_imgspot_img