அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் டவர் மீது ஏறி இளைஞர் ஒருவர் போராட்டம்.
மல்லிப்பட்டினம் அடுத்து உள்ள இரண்டாம்புளிக்காடு பகுதியில் அமைந்துள்ள கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய மதுக்கடையை உடனே அந்த பகுதியில் இருந்து உடனடியாக துறைரீதியான அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவில் பூசாரி அருணாச்சலம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள டவர் மீது ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்.இதையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இதனால் அந்தபகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.