Thursday, February 12, 2026

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது, கும்பகோணத்தில் விரைவில் நடைபெற உள்ள மஹல்லா ஒருங்கிணைப்பு மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், மஹல்லாக்களுக்கிடையேயான ஒற்றுமை, சமூக ஒருங்கிணைப்பு, இளைஞர்களின் பங்களிப்பு, கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்களில் மாநாடு முக்கிய பங்கு வகிக்க வேண்டிய அவசியம் குறித்து விரிவாக பேராசிரியரால் எடுத்துரைக்கப்பட்டது.

மஹல்லா ஒருங்கிணைப்பு மாநாடு சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமையும் எனத் தெரிவித்ததுடன், மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முறையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த சந்திப்பின்போது, அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில்...

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு,...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...
spot_imgspot_imgspot_imgspot_img