அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் ஜமாத்துல் உலமா சபை நடத்தும் முத்தலாக் தடையை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டும் மத்திய அரசைக் கண்டித்து இன்று மதியம் 2 மணிக்கு தலைமை தபால்நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்திய அரசியலைமைப்பு சட்டம் வழங்கிய உரிமையை பறிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு முறையும் மத்திய பாஜக அரசு கையிலெடுக்கும் திணிப்பை கண்டித்து அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா பள்ளிவாசல்களிலும் வாகன வசதி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.ஆகவே இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜமாத்துல் உலமா சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.அதிரையில் இருந்து 34 வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது