Friday, April 17, 2026

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

spot_imgspot_imgspot_imgspot_img


அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.


குறிப்பாக, இண்டேன் உள்ளிட்ட கேஸ் விநியோக நிறுவனங்கள் திட்டமிட்டே விநியோகத்தை தாமதப்படுத்தி, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்களா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.


இதற்கிடையில், மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள பதற்றம் மற்றும் இரான் தொடர்பான போர் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் கேஸ் விலை உயர்வு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில், சில நிறுவனங்கள் தற்போது விநியோகத்தை தாமதப்படுத்துகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.


ஏற்கனவே புக்கிங் செய்த பல குடும்பங்களுக்கு இன்னும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படவில்லை.
இந்த நிலைமையை உடனடியாக ஆய்வு செய்து, புக்கிங் செய்த அனைவருக்கும் தாமதமின்றி கேஸ் வழங்க மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை திமுக வேட்பாளரிடம் அதிரை TIYA சங்கம் மனு: 6 முக்கிய...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்  (TIYA)...

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச் செயலாளருக்கு தஞ்சை நிர்வாகிகள் பாராட்டு.

அதிராம்பட்டினம் ஏப் 11தஞ்சாவூர் மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 47வது வார்ட் உறுப்பினர் ஜெ. சரீப், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச்...
spot_imgspot_imgspot_imgspot_img