Friday, April 17, 2026

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின் தவறான கொள்கைகள், தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் எரிவாயு (LPG) விலை, மேலும் பல இடங்களில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவை பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டம் 15.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற உள்ளது. இதில் திமுக மேற்கு கழக நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உங்கள் பட்ஜெட்டில் அழகிய வீட்டு மனை: அதிரை ECR-ல் விற்பனைக்குத் தயார்!

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கிழக்கு கடற்கரைச் சாலை (ECR)...

பட்டுக்கோட்டை திமுக வேட்பாளரிடம் அதிரை TIYA சங்கம் மனு: 6 முக்கிய...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்  (TIYA)...

அதிராம்பட்டினத்தில் துணை ராணுவப் படையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு: தேர்தல் பாதுகாப்பிற்காகப்...

அதிராம்பட்டினம்: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வகையில்...
spot_imgspot_imgspot_imgspot_img