Friday, April 17, 2026

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

spot_imgspot_imgspot_imgspot_img


பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு வருகின்றன.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில், முன்னாள் எம்.எல்.ஏ. என்.ஆர். ரங்கராஜன் மீண்டும் களம் கண்டால் வெற்றி உறுதி என பேச்சு நிலவுகிறது. அதே நேரத்தில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மகேந்திரன் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பு அதிகம் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பட்டுக்கோட்டை தொகுதியை தனது கட்சிக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக மற்றும் அதிமுக தலைமைகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மற்றொரு புறம், திமுக தொண்டர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்தும் நிலவுகிறது. பட்டுக்கோட்டை தொகுதியில் முன்னதாக போட்டியிட்ட அண்ணாத்துரைவை தவிர்த்து புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கினால், அந்த தொகுதி மீண்டும் திமுக கூட்டணியின் கைகளில் இருந்து நழுவி செல்லக்கூடும் என்ற அச்சமும் கட்சித் தொண்டர்களிடையே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், பட்டுக்கோட்டை தொகுதியில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அதிக கவனம் பெறத் தொடங்கியுள்ளது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் எவ்வாறு அமையும் என்பது விரைவில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை திமுக வேட்பாளரிடம் அதிரை TIYA சங்கம் மனு: 6 முக்கிய...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்  (TIYA)...

அதிராம்பட்டினத்தில் துணை ராணுவப் படையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு: தேர்தல் பாதுகாப்பிற்காகப்...

அதிராம்பட்டினம்: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வகையில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருவதாக அதிமுக வேட்பாளர் CV....

பட்டுக்கோட்டை தொகுதியில் அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் CV சேகர் தனது கருத்தை வெளியிட்டு,...
spot_imgspot_imgspot_imgspot_img