அதிரை எக்ஸ்பிரஸ்:- முத்தலாக் தடை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை சார்பாக பல்வேறு ஜமாத்தார்கள், அரசியல் கட்சிகள்,இயக்கங்களை ஒன்றிணைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.
அதனடிப்படையில் பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் அருகில் மதியம் 2 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்தனர்.பட்டுக்கோட்டையை சுற்றியுள்ள அதிரை,மதுக்கூர்,மல்லிப்பட்டிணம் போன்ற ஊர்களில் இருந்து வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஆர்ப்பாட்ட களத்திற்கு வந்து மத்திய பாஜக அரசிற்கு எதிராக அனைவரும் கண்டன குரலை பதிவு செய்தனர்.
இந்திய அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளை பறிக்கும் பாஜக அரசின் எல்லாவித செயல்பாடுகளுக்கும் அல்லாஹ் வரும்காலங்களில் முற்றுப்புள்ளி வைப்பான் என்று கூட்டத்தில் கண்டன உரையாற்றினார்கள்.அமைப்பு,கட்சிகளைக் கடந்து இஸ்லாமிய வழிமுறைகளுக்கு எதிராக செயல்படும் மோடி அரசை கண்டித்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லாமல் நடந்து முடிந்தது