Friday, April 17, 2026

அதிரை: தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டும் மேற்கு திமுக – கிழக்கில் மந்த நிலை; கூட்டணி கட்சிகள் ஆதங்கம்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அமைப்பை நிர்வாக சீர்திருத்தங்களுக்காக கிழக்கு மற்றும் மேற்கு என இரு பகுதிகளாக பிரித்து செயல்பட திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மேற்கு நகர திமுக அஸ்லம் தலைமையிலும், கிழக்கு நகர திமுக இராம குணசேகரன் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கா. அண்ணாத்துரை போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகள் மேற்கு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீடு தோறும் பிரச்சாரம், வாக்காளர் சந்திப்பு, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல் திட்டங்கள் போன்றவை வேகமெடுத்து வருகின்றன.

ஆனால், இதற்கு மாறாக கிழக்கு பகுதியில் இதுவரை குறிப்பிடத்தக்க தேர்தல் முன்னெடுப்புகள் எதுவும் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் இடையே அதிருப்தி நிலவி வருகிறது.
மேற்கு பகுதியில் நடைபெறும் செயல்பாடுகள் போன்று, கிழக்கு பகுதிக்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், கிழக்கு பகுதியில் பணிகள் தொடங்காததற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த நிலை தொடருமானால், தேர்தல் நேரத்தில் ஒருங்கிணைப்பு சவாலாக மாறக்கூடும் என்பதால், திமுக தலைமையினர் விரைந்து தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவி வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உங்கள் பட்ஜெட்டில் அழகிய வீட்டு மனை: அதிரை ECR-ல் விற்பனைக்குத் தயார்!

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கிழக்கு கடற்கரைச் சாலை (ECR)...

பட்டுக்கோட்டை திமுக வேட்பாளரிடம் அதிரை TIYA சங்கம் மனு: 6 முக்கிய...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்  (TIYA)...

அதிராம்பட்டினத்தில் துணை ராணுவப் படையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு: தேர்தல் பாதுகாப்பிற்காகப்...

அதிராம்பட்டினம்: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வகையில்...
spot_imgspot_imgspot_imgspot_img