தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகாமையில் இன்று(05/01/2018) வெள்ளிக்கிழமை பகல் 02:00 மணியளவில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் 4000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்க்கு வருகை தரும் பொது மக்களை வழிநடத்தும் வகையில் மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய பாப்புலர் பிரண்ட் அஃப் இந்தியா(PFI) சார்பில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு பார்க்கிங் வசதி, உணவு பண்டங்கள் வழங்குவது போன்ற செயல்களில் முன்வந்து உதவினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பல இஸ்லாமியர்களும் தங்களுடைய பங்களிப்பின் மூலம் பொதுமக்களை வழிநடத்துவது மற்றும் உதவுவது போன்ற செயல்களில் தன்னார்வளராக ஈடுபட்டனர்.