தற்போது குளிர்காலம் என்பதால் பலரும் சளி, இருமலால் அவஸ்தைப்படுவார்கள். சளி பிடித்துவிட்டால், மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்கக்கூடும். இதற்கு சுவாசக் குழாயில் சளித்தேக்கம் அதிகம் இருப்பது தான் காரணம்.
இந்த சளியைப் போக்க நாம் கடைகளில் விற்கப்படும் டானிக்கை வாங்கிக் குடிப்போம். அப்படி குடிக்கும் போது, சளியில் இருந்து நிவாரணம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால் அது தற்காலிக நிவாரணி தான்.
ஒவ்வொருவரும் நம் உடலில் சளியை தேக்கிக் கொண்டு தான் இருக்கிறோம். ஒருவரது உடலில் சளி தேங்குவதற்கு உண்ணும் உணவுகள், பழக்கவழக்கங்கள் போன்றவையே காரணம்.இப்படி உடலில் தேங்கும் சளியை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களின் மூலம் வெளியேற்றலாம். இக்கட்டுரையில் உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மஞ்சள்:மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் தான், அதன் மருத்துவ குணத்திற்கு காரணம். இது பாக்டீரியாக்களை எதிர்க்கும் மற்றும் இதை உப்புடன் சேர்த்து பயன்படுத்தும் போது, உடலினுள் உள்ள தொற்றுக்களை சரிசெய்து மற்றும் தொண்டை புண்ணை போக்கும். கீழே சளியை வெளியேற்ற மஞ்சளை உட்கொள்ளும் முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:உடலில் இருந்து சளியை வெளியேற்ற உதவும் பானம் தயாரிக்கத் தேவையான பொருட்களாவன, 1 டீஸ்பூன் மஞ்சள், 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீர்.
தயாரிக்கும் முறை:ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, தினமும் 3-4 முறை குடிக்க, சளி உருகி, தொண்டையில் கபம் தேங்குவது குறையும்.
இஞ்சி:இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தாக்குதலை தடுக்கும் ஆன்டி-ஹிஸ்டமைன் ஏஜெண்ட்டும், சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் நிறைந்துள்ளன. அதோடு இஞ்சி உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான சளியை வெளியேற்றும். அதற்கு இஞ்சியை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பானம் போன்று தயாரித்து உட்கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்:சளியை வெளியேற்றும் இஞ்சி பானம் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களாவன,
இஞ்சி – 6-7 துண்டுகள்
மிளகு – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
தயாரிக்கும் முறை:
தயாரிக்கும் முறை:முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்தால் பானம் தயார். இதை சளி பிடித்திருக்கும் போது, தினமும் குடித்து வர சளி விரைவில் வெளியேறும்.
ஆப்பிள் சீடர் வினிகர்:ஆப்பிள் சீடர் வினிகர், உடலில் உள்ள pH அளவை சீராக்குவதோடு, அதிகப்படியான சளி உற்பத்தியைத் தடுக்கும். அதற்கு 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, தினமும் குடிக்க வேண்டும்.