தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசித்து வரும் அஹமது அவர்கள் பெரும் கவிஞராக திகழ்ந்து வருகிறார்.
இவர் தமிமாமணி போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, இவரை பலர் அதிரை அஹமது அன்றும் அழைத்தனர்.
இவர் எழுதிய நபி(ஸல்) வரலாறு என்ற புத்தகம் இன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தின் அருகில் மாலை 06:30மணியளவில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சி இலக்கிய சோலை நூல் வெளியீட்டு விழா என்று பெயரில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு M. முகம்மது சேக் அன்சாரி(மாநில துணை தலைவர், பாப்புலர் பிரன்ட் ட்ரஸ்ட்) அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் வரவேற்புரையை புதிய விடியலின் இணை ஆசிரியர் B.ரியாஸ் அஹமது அவர்கள் வழங்கினர்.
இந்நிகழ்வில் SDPI கட்சியின் தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி, ரஹ்மத் பப்லிகேஷனின் தலைமை மேல்ஆய்வாளர் அ. முகமது கான் பாகவி, பேராசிரியர்.அ. மார்க்ஸ்(தலைவர் NCHRO) ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நூல் வெளியிட்டு விழாவின் ஏற்புரை தமிழ்மாமணி.அதிரை அஹமது அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இறுதியாக இந்நிகழ்ச்சியில் நன்றியோரையை J. முகம்மது நாஸிம் அவர்கள் வளங்கினார்.