தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இன்று(07/01/2018) காலை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்(TIYA) மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காளி இரத்த வங்கி இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் TIYA சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமை MMS.சேக் மற்றும் ஜபுருல்லாஹ் ஆகியோர் துவங்கி வைத்தார்.
இம்முகாமில் அதிரையை சேர்ந்த பலர் தன்னார்வளராக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.
இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு போஸ்ட்களும் சங்க வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தது.
இம்முகாமில் இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.