Home » முத்துப்பேட்டையில் பிளஸ்2 மாணவன் பலி பிரவீன் வயது(17)

முத்துப்பேட்டையில் பிளஸ்2 மாணவன் பலி பிரவீன் வயது(17)

0 comment

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்த அண்ணாதுறை மகன் கஜேந்திரன் வயது 30 இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஒட்டி வருகின்றர். நேற்று இரவு தனது சொந்த தேவைக்கு மேல் தொண்டியக்காடு பகுதியிலிருந்து டிராக்டரில் மணல் ஏற்றி வந்தார். அவருக்கு உதவியாக அதே பகுதியை சேர்ந்த மணிவாசகம் மகன் பிரவின் வயது 17 ராஜேந்திரன் மகன் தீபன் வயது 17 ஆகியோர் வந்தனர். டிராக்டர் டிப்பரில் பிரவின் , தீபன் ஆகியோர் அமர்ந்து வந்தனர். அப்போது 

ஓரிடத்தில் வளைவில் திருப்பும் போது டிராக்டரில் டிப்பர் மணலுடன் கவிழ்த்து விபத்துக்குள்ளானது .இதில் பிரவின் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார் தீபன் படுகாயம் அடைந்தார் M.பிரவின் இவர்தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். 

இம்மாணவனின் மறைவை அனுசரிக்கும் விதமாக நாளை  திங்கட்கிழமை 08.01.2018 பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த மாணவனின் பெற்றோருக்கும் குடும்பத்தாருக்கும்

ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter