சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் என திவாகரந் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சசிகலா சகோதரர் திவாகரன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கு அரசிடம் ஒன்றுமில்லை. போக்குவரத்துறை, மின்துறை, சுகாதாரத்துறை என அனைத்திலும் தோல்வியடைந்து தமிழக அரசு கேசுவால்டி நிலையில் இருக்கிறது.
அதிமுகவினர் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என நினைத்தால் கூட ஆர்கே நகர் தேர்தல் முடிவுக்கு பிறகு தேர்தலை நடத்த யோசனை பன்னமாட்டார்கள். இவ்வளவு வாக்குகள் பெற்று வெற்றிபெறுவோம் என நாங்களே எதிர்பார்க்கவில்லை.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு.. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் நாங்கள் எங்கள் நிலைபாட்டில் தெளிவாக உள்ளோம். எங்கள் வெற்றியை நோக்கி நாங்கள் பயணிப்போம் என்றார்.