அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கடற்கரைத்தெரு 8வது வார்டு மற்றும் 9வது வார்டு பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் சரிவர இயங்குவதில்லை என்றும், விளக்குகளை அப்பகுதி மக்களே கையாள்வதற்கேற்ற வகையில் Timer main switch ஏற்படுத்தி தரவேண்டும்.மேலும் கடற்கரைத் தெரு பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் அச்ச உணர்வுடனே நடந்து செல்கின்றனர். ஆகவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறையை அணுகி உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.கோரிக்கை மனு கொடுக்கும் போது கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நறபணி மன்ற நிர்வாகிகள் மற்றும் தெருவாசிகள் உடனிருந்தனர்
More like this
அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...
அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !
அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
மரண அறிவிப்பு – சமையல் நெய்னா (எ) நெய்னா முகம்மது.
புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் நெய்னா முகமது அவர்களின் பேரனும், மர்ஹும் முகைதீன் பக்கீர் அவர்களின் மகனும், வெட்டிவயல் யாசீன் அவர்களின் மருமகனும், செந்தலை...