Friday, January 17, 2025

அமீரகத்திற்கு வேலைவாய்ப்பு விசாவில் வருபவர்களின் கனிவான கவனத்திற்கு!

spot_imgspot_imgspot_imgspot_img
  • பிப்ரவரி 4, 2018 முதல் அமீரகத்திற்கு வேலைவாய்ப்பு விசாவில் வருபவர்களுக்கு நன்னடத்தை நற்சான்றிதழ் கட்டாயம் வேண்டும்

அமீரகத்திற்கு வேலைவாய்ப்பு விசாவில் (UAE Work permit visa) வருபவர்கள் எதிர்வரும் 2018 பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் சான்றழிக்கப்பட்ட (Attested)  நன்னடத்தை நற்சான்றிதழை (Good conduct certificate) விசா விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சொந்த நாட்டில் அல்லது பிற வெளிநாட்டில் 5 வருடங்கள் வாழ்ந்திருந்தால் அந்தந்த நாடுகளிலிருந்து நன்னடத்தை நற்சான்றிதழை பெற்று (a certificate of good conduct — issued by either by his home country or the country where he lived for five years) அவற்றை அந்தந்த நாடுகளில் செயல்படும் அமீரக தூதரகங்கள் அல்லது அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச நல்லுறவுகளுக்கான அமைச்சகத்தின் சார்பில் வெளிநாடுகளில் செயல்படும் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர் எனும் வாடிக்கையாளர் சேவை மையங்களில் கொடுத்து சான்று பெற்று வேலைவாய்ப்பு விசாவுக்கான விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். (The certificate must then be attested by UAE diplomatic missions, or oversees Customer Happiness Centres at the Ministry of Foreign Affairs and International Cooperation)

இந்த நன்னடத்தை சான்றிதழ் வேலைவாய்ப்பு விசாவில் வருபவர்களுக்கு மட்டுமே அன்றி அவர்களது ஸ்பான்சரின் கீழ் வரும் குடும்ப உறவுகளுக்கு தேவையில்லை.(The certificate will only be applicable for the worker concerned and not his/her dependents. Those coming to the country on visit or tourist visas needn’t get the certificate either)

இந்த புதிய நடைமுறை விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசாவில் அமீரகத்திற்குள் வருபவர்களுக்கு பொருந்தாது (The committee clarified that the certificate is not required from those who come to the country on a visit or tourist visa) எனவும் விளக்கமளித்துள்ளது அமீரக ஒருங்கிணைப்பு கமிட்டி  (The UAE Coordination Committee) எனும் உயர்மட்ட அரசமைப்பு.

Sources: Gulf News & Khaleej Times

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய...

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...

காணவில்லை : அதிரை யூசுஃப்!

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது - 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு...
spot_imgspot_imgspot_imgspot_img