அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் சோதனை ரயில் ஓட்டம் இன்று நடைபெற்றது.
பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு போன காரைக்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூரை இணைக்கும் அகலரயில் பாதை அமைக்கும் பணி கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பட்டுக்கோட்டையில் அகலரயில் பாதை அமைக்கபட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.கூடிய விரைவில் இந்த வழித்தட திட்டம் நிறைவடைய இருப்பதால் அதிரையை சுற்றியுள்ள பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.