சென்னை.ஜன.09., அரியலூர் மாணவி அனிதா கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த சகோதரி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் போராட்டங்களை நடத்திவந்தனர்.
இந்நிலையில்,
சகோதரி அனிதாவின் படுகொலையை கண்டித்து கடந்த ( 03.09.2017 ) அன்று
சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் மெரினாவை நோக்கி பேரணியாக சென்றபோது காவல் துறையால் மஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தை நடத்தியதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர்
ரவுஃரஹிம், திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் செயலாளர் பஷீர் அஹமது, ஜாவித் ஜாபர் மற்றும் லத்திப் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனையடுத்து,
இன்று (09.01.2018) எழும்பூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் மஜக நிர்வாகிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர் சதாத் அவர்கள் போராட்டத்தின் நோக்கத்தையும், சமுதாய அக்கறையுடன் நடைபெற்றதாகவும் விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து அவர்கள் மீது போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.