கர்நாடகா மாநிலம்,சிக்மகளூர் மாவட்டம், மூடிகெரே என்ற பகுதியைச் சேர்ந்தவர் தன்யாஸ்ரீ (20).இவர் தனது நண்பருக்கு அனுப்பிய வாட்ஸ் அப்பில் I LOVE MUSLIMS என்று செய்தி அனுப்பியுள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த சங்பரிவாரக் கயவர்கள் அப்பெண்ணிற்கு பல்வேறு துன்பங்களை அளித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
முஸ்லிம்களைப் பிடிக்கும் என்று கூறிய ஒரு வார்த்தைக்காக ஓர் இளம் பெண்ணின் உயிரைக் குடித்த காவி பயங்கரவாதிகளின் இந்தச் செயலைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
கர்நாடகாவில் மக்களூர்,உடுப்பி, சிக்மலூர் போன்ற மாவட்டங்களில் காவிகளின் நடவடிக்கைகளால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அடிக்கடி கலவரம் நடக்கும்.இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக வெளியே நின்று பேசக்கூட முடியாத நிலை உள்ளது.
தன்யாஸ்ரீ, தங்கள் மாவட்டத்திலுள்ள மதக் கலவர நிலை குறித்து, வாட்ஸ்அப்பில் தன் நண்பன் சந்தோஷ் என்பவனிடம் கவலை தெரிவித்துள்ளார் . சந்தோஷோ, அதுபோன்ற நிலை இருப்பது நல்லதுதான், இல்லை எனில் லவ் ஜிகாத் அதிகமாகிவிடுகிறது என தன்யாஸ்ரீக்குப் பதில் அனுப்பியுள்ளான்.
ஆனால் தன்யாஸ்ரீ இதை ஏற்கவில்லை. எனக்கு முஸ்லிம்களைப் பிடிக்கும்(Ilove Muslims) என்று மெசேஜ் அனுப்பினார். இதைப் பார்த்த சந்தோஷ் இப்படியெல்லாம் இருக்க கூடாது. நீயும் லவ்ஜிகாத்திற்குள் தள்ளப்படுவாய் என அட்வைஸ் செய்துள்ளான்.
தன்யாஸ்ரீ முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கிறாள் என ஆத்திரப்பட்டான் காவிக்கூட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்.ஆனால் அவன் இத்தோடு விடவில்லை, இந்த பர்சனல் சாட் விவரத்தை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து, ‘இந்த பொண்ணு, முஸ்லிம்களை லவ் பண்ணுது’ என்ற தொனியில் தனது நண்பர்கள் குரூப்புக்கு அனுப்பி வைத்துள்ளன்.
அதேபோல உள்ளூர் பஜ்ரங்தள் நிர்வாகிகளுக்கும் வாட்ஸ்அப்பில் இதை அனுப்பி வைத்துள்ளான்.
இதன்பிறகு பா.ஜ.க இளைஞர் பிரிவுத் தலைவன் அனில்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல் தன்யாஸ்ரீ வீட்டுக்கே போய், தாய் முன்னிலையில் அவரைத் திட்டித் தீர்த்துள்ளனர். இனிமேல் இதுபோன்ற பழக்க வழக்கம் இருக்க கூடாது என கத்திவிட்டுச் சென்றுள்ளனர்.மேலும் சிலர் தன்யாஸ்ரீ படத்தையும் முஸ்லிம் ஒருவர் படத்தையும்,இணைத்து மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த தன்யாஸ்ரீ தனது வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது அவர் எழுதி வைத்த தற்கொலை கடிதம் கிடைத்தது.
அதில், தன்னை மிரட்டியதாலும், போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாலும் மனமுடைந்து தற்கொலை செய்வதாக தன்யாஸ்ரீ கூறியிருந்தார். தற்கொலைக்குக் காரணமான அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்யாஸ்ரீ கூறியிருந்தார்.
இதுதொடர்பாக பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்பரிவாரக் கூட்டத்தினர் இந்துத்துவா கொள்கையைக் கூறி இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தது வருகின்றனர்.
ஆனால் அவர்களின் பாசிசச் சிந்தனையும்,இந்துத்துவா கொள்கையும் இஸ்லாமியருக்கு மட்டுமல்ல இந்துக்களின் உயிருக்கும் ஆபத்தானது.இதை தன்யாஸ்ரீயின் தற்கொலை உறுதிப்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரித்து இந்திய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை சங்பரிவாரங்கள் தொடர்ந்து செய்கின்றன.அதன் காரணமாகவே இளம் பெண்ணிற்குத் தொல்லை கொடுத்து, அவரைத் தற்கொலை செய்யத் தூண்டியுள்ளனர்.
காவிக் கூட்டம் மட்டுமே இந்த நாட்டின் பாதுகாவலர்கள் போல தங்களைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது.ஆனால் இவர்கள்தான் நம் தேசத்திற்கு மிகவும் ஆபத்தான சக்திகள். இவர்களுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதையே தன்யாஸ்ரீயின் தற்கொலை நமக்குக் காட்டுகிறது.
அமைதியை விரும்பும் மக்களைக் கொல்லத் துடிக்கும் காவி பயங்கரவாதிகளைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் இதற்குக் காரணமானவர்களைத் தூக்கில் ஏற்ற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக
பொதுச்செயலாளர்
M.S.சைய்யது இப்ராஹிம்