சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் மன்ற தலைவர் வ.விவேகானந்தம் தலைமையில் துணைத்தலைவர் எஸ்.முஹம்மது இப்ராஹிம் துணை செயலர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது முன்னிலையில் அதிரை சுற்றுச்சூழல் மன்ற அலுவலகத்தில் 10.01.2018 அன்று மாலை 4.30மணிக்கு நடைபெற்றது.
செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம் வரவேற்றார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
09.01.2018 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி பொதுக்குழு கூட்டத்தில சிறந்த சேவைக்காக மூன்று விருதுகள் பெற்ற அதிராம்பட்டினம் இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
அதிராம்பட்டினத்தில் பிப்ரவரி 17ந்தேதி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
கருத்தரங்கிற்கு அனைத்து ஜமாத்தார்கள்,இளைஞர் அமைப்புகள்,கிராம பஞ்சாயத்தார்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்களை அழைக்க முடிவு செய்யப்பட்டது.
அரசுத்துறையில் நேர்மையாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலரை உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
உறுப்பினர்களின் வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
20.01.2018 ல் கற்பகச்சோலை மற்றும் மரக்கன்றுகள் நாற்றங்கால் கிராமம் சின்ன கல்லுகுடியிருப்பிற்கு பசுமை சுற்றுலா சென்று வர தீர்மானிக்கப்பட்டது.
முடிவில் மன்ற பொருளாளர் எம்.முத்துக்குமரன் நன்றி கூறினார்