அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரியும் டாக்டர்.அ.அன்பழகன் அவர்கள் அவர் பணிபுரியும் இடங்களையெல்லாம் மரம் , அலங்கார செடிகள், மூலிகை செடிகள் வளர்த்து பசுமையாக்கிவிடுவார்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் இவர் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்த போது வைத்த மரக்கன்றுகள் இன்று பெருமளவில் வளர்ந்து வனமாக உள்ளன.
அதிரை அரசு மருத்துவமனையில் சொர்க்கம், செர்ரி, புங்கன், அலங்கார செடிகள், முள் இல்லதா மூங்கில், மற்றும் மூலிகை தோட்டங்களை அமைத்துள்ளார்.
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத்தினர் மருத்துவமனை சென்று அவரது பணிகளை பாராட்டினர்.
மேலும் நவீன வசதிகளுடன் அமையப்பெற்ற அதிரை மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளையும் சுற்றி காண்பித்தார்.