சுமார் 31 ஆயிரம் மக்கள் தொகை, ஆண்டுக்கு இதர வரி இனங்கள் மூலம் வரும் வரி வருவாய் மட்டும் பல லட்சம். ஆனால் 2க்கு 6 அடி கொண்ட ஒரு கருங்கலை கூட இந்த பேரூராட்சி நிர்வாகத்தால் சுயமாக வாங்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், 13வது வார்டு வாய்க்கால் தெரு கடை அருகே ஆபத்தான நிலையில் திறந்தவாறு கிடக்கும் கழிவுநீர் வாய்காலை மூடி கேட்டு வருடங்கள் ஓடிவிட்டன. நீண்ட நாட்களாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை என ஆதங்கப்படுகின்றனர்.
சிறுகுழந்தைகள் ஓடி விளையாடும் இந்த பகுதியில் விபரீதம் நிகழ்வதற்கு முன் விழித்துக்கொள்ளுமா பேரூராட்சி?