அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையையும்,சேர்மன்வாடி சாலையும் ஆஸ்பத்திரி சாலை வழியாக இணைக்கும் சாலையில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திலகர்தெருவில் புதியதாக போடப்பட்டுள்ள தார்சாலையிலே சில இடங்களில் மீண்டும் தார்ஜல்லி போட்டு மறுபடியும் சாலை அமைத்துள்ளனர்.இதனால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஏன் சாலைக்குமேல் சாலை அமைத்தார்கள்? இந்த சாலை தரமானது தானா? இதனை பேரூராட்சி கண்டுக்கொள்ளவில்லை ஏன்? அப்படியென்றால் சிலமாதங்களுக்கு முன் அதிராம்பட்டினம் சேதுரோட்டைலிருந்து ஆறுமுக கிட்டங்கி தெரு வரை போடப்பட்ட சாலையை போல் இரண்டே நாட்களில் பள்ளம் விழுந்துவிடுமோ? என்ற அச்சமும் பொதுமக்களிடமும் நிலவுகிறது.
பழைய சாலையில் தான் ஒட்டு போடுவதை பார்த்திருக்கிறோம்,ஆனால் இங்கு நிலைமை வேறு ,மேலும் சாலை அமைப்பதில் ஏனோ தானோ வின்று அமைப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.