அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகத்தில் தொடர்ந்து மதவெறிப்பேச்சுகளையும்,கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசிவருகிறார்.
இந்நிலையில் அண்மையில் ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குறிய கருத்து பதிவுசெய்திருந்தார்.அதை கண்டிக்கும் விதமாக எச்.ராஜா பேசும் போது நபி அவர்கள் பற்றியும்,அவர்களுடைய மனைவி பற்றியும் விமர்சித்துள்ளார் இதனைக் கண்டித்து இன்று (12.1.2018) மாலை தமிழ்நாடு தவ்ஹீத் சார்பாக ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.இதில் ததஜவின் மாநில பொதுச்செயலாளர் சையத் இப்றாகீம் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.