தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1984 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை, 24 ஆண்டுகள் மாணவர்களுக்கு ‘நீதி போதனை’ கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்தவர் ஹாஜி என்.எஸ் ஜமால் முஹம்மது (வயது 76). தீனியாத் ஆசிரியரான இவர் ‘ஹஜரத்’ என அனைத்து மாணவர்களாலும் அன்புடன் அழைக்கப்படுபவர்.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப் செய்யப்படும்.