தஞ்சாவூர் மாவட்டம், அதிரை அடுத்த வல்லிக் கொள்ளைக் காட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.
இவரது மனைவி ஜோதி, வயது 55. இவர் இன்று மாலை சுமார் 7 மணியளவில் அதிரை அடுத்துள்ள வல்லிக்கொள்ளை காடு கிழக்கு கடற்கறைச் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். பிறகு இவர் சாலையை கடக்கும் பொழுது எதிரே இருசக்கரத்தில் வந்தவர் ஜோதி மீது பயங்கரமாக மோதியதில் ஜோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள் பலியான ஜோதியை அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்தகுறித்து அதிரை காவல் துரையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.