110
அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க SISYA நிர்வாகிகள் பட்டுக்கோட்டை நகர சட்டமன்ற உறுப்பினர் சிவி சேகர் அவர்களை இன்று சந்தித்தனர். இச் சந்திப்பில் அதிரை சேர்மன் வாடியில் இருந்த தொடங்கி ஜம் ஜம் ஹோட்டல் வழியாக மரைக்காகுளம் வரையிலும் அதேபோல் நடுத்தெருவில் இருந்து தொடங்கி அதிரை கல்லூரி சாலை வரையிலும் புதிதாக தார்ச் சாலை அமைத்து தர வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது. மேலும் இந்த சந்திப்பில் ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் அபுபக்கர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள் அஹமது அனஸ், சலீம் ஆகியோர் உடனிருந்து பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.