சென்னை, தாம்பரம் – படப்பையில் அமைந்துள்ள தானிஷ் அஹ்மது இஞ்சினியரிங் கல்லூரியின் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு கணித பிரிவு மாணவர்களுக்கு ” யங் இராமானுஜம் ” என்ற திட்டத்தின் கீழ் கணித பாட தேர்வு நடத்தப்பட்டது.
சுமார் 4000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அந்தந்த பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சிறப்பு சான்றிதழும் , பதக்கமும் வழங்கப்பட்டன.
தேர்வு எழுதிய 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவிகளில் மாவட்ட அளவில் முதல் முதலிடத்தை , பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளி மாணவி சுரேகாவும், இரண்டாம் இடத்தை , திருவோணம் நவீனா மேல்நிலை பள்ளி மாணவி தமிழரசியும், மூன்றாம் இடத்தை , மதுக்கூர் விக்ரமம் காந்தி மெட்ரிக் பள்ளி மாணவி ரக்ஷனாவும் பெற்றனர்.
இவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் திரு.மூஸா மற்றும் கல்லூரியின் செயலர் திரு.காதர் ஷா , மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ரஜினி இவர்களின் வாழ்த்துக்களுடன் கல்லூரியின் பேராசிரியர் கோபி மற்றும் ஒருங்கினைப்பாளர் யஹ்யா ஆகியோர் சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினர்.
இந்த தேர்வு எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது என பள்ளி தலைமை ஆசிரியர்கள், கணித ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் நெகிழ்ச்சியோடு கூறினர்.