28
அதிரை எக்ஸ்பிரஸ்::- மல்லிப்பட்டிணத்தில் மீன்களின் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.
பொங்கல் அன்று அசைவ உணவை இந்து மத சகோதரர்கள் உண்பதில்லை.அடுத்த நாள் தான் அசைவ உணவு வகைகளை உண்பார்கள்.இந்நிலையில் இன்று அதிகாலை முதலே மீன்,கோழி மற்றும் ஆடு இறைச்சி விற்பனை களைகட்டியது.இதனால் வியாபாரிகள் மிகுந்த சந்தோசத்துடன் விற்பனை செய்தனர். பொதுமக்களும் ஆர்வத்துடன் தங்களுக்கு தேவையான மீன்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
பட உதவி:- மல்லிப்பட்டிணம் ஜெகுபர் சாதிக்.