அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் பொங்கல் விளையாட்டு விழா சிறப்பான முறையில் துவங்கியது.
40 ம் ஆண்டு விழாவாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை போட்டியை துவக்குவதற்கு முன் அதிரை காவல்துறை துணை ஆய்வாளர் அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார், விளையாட்டு விழாவை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் திரு.s. சேக்கமுத்து அவர்கள் துவக்கி சிறப்புரையாற்றினார் . இதில் கிராம தலைவர் k. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார் மேலும் கிராம பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர் மன்றம் சார்பாக அம்பேத்கர் உருவப்படத்திற்க்கு மாலை அணிவித்து அம்பேத்கரின் புகழ் எடுத்து கூறப்பட்டது. மன்ற பொருப்பாளர்கள் அப்போது சிறுவர்களுக்கான ஓட்ட போட்டிகளை துவக்கி வைத்தனர்.மேலும் இப்போட்டியில் கிராமவாசிகள், இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு விழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது மேலும் இவ்விழா நாளை பரிசளிப்புடன் முடிவுபெறும்.