அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.சி.வி.சேகர் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (16.01.2018) காலை ஆலத்தூரில் அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
சுற்றுச்சூழல் மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை சட்டமன்ற உறுப்பினரிடம் தலைவர்வ.விவேகானந்தம் செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம் துணை செயலாளர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது பொருளாளர் எம்.முத்துக்குமரன் தணிக்கையாளர்என்.ஷேக்தம்பி தூய்மைதூதுவர்கள் செம்பாளூர்.வை.முத்துவேல் , விதை.சக்திகாந்த் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருப்பதாகவும் மேலும் தேவையான வசதிகளை படிப்படியாக செய்துதருவதாகவும் தெரிவித்தார்.