14546 கால் பண்ணுங்க….ஆதார் எண்ணை இணைச்சிடுங்க…!
ஆதார்எண் இணைப்பு பல திட்டகளுக்கு கட்டாயமாகியுள்ளது மத்திய அரசு .
அதற்கான காலக்கெடுவை தற்போது நீட்டித்து உள்ளது.
ஆதார் எண்ணை வங்கி கணக்கு,பான் எண்,ரேஷன் என அனைத்திலும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது
அதன்படி,பெரும்பாலோனோர்இணைத்து விட்டனர்.இதனை தொடர்ந்து வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை மொபைல் என்னுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
நாம் பயன்படுத்தும் மொபைல் எண்ணிலிருந்து 14546 என்ற எண்ணிற்கு கால் செய்து,அதில் கூறப்படும் வழிமுறையை பயன்படுத்தி, 12 இலக்க எண்ணை பதிவு செய்தாலே போதும்.
ஒரே நிமிடத்தில் மொபைல் என்னுடன் ஆதார் எண்ணை இணைத்து விடலாம். இது குறித்து புரிதல் இல்லாதவர்களுக்கு,மிக எளிதில் மொபைல் மூலம் எப்படி இணைப்பது என்பதை எடுத்துகூறி மற்றவர்களும் பயன்பெற செய்யலாம்.