அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கடற்படை இயங்கி வந்த கட்டிடத்தை அரசு பொது மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்.
மல்லிப்பட்டிணத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த கடற்படையை இரண்டாண்டுகளுக்கு முன் திரும்ப பெற்றது. கடற்படையினர் காலி செய்து வேறு இடங்களுக்கு சென்றனர்.இதனால் அந்த கட்டிடம் எந்தவித பயன்பாடும் பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் சிறிய விபத்துகள் முதல் பெரிய விபத்துகள் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.உடனடி மருத்துவ உதவியோ அல்லது முதலுதவியோ பெறுவதாக இருந்தால் 20 கிலோ மீட்டருக்கு மேல் சென்றால் தான் மருந்துவ உதவி பெறவேண்டிய சூழல் உள்ளது.இதனால் கொண்டு செல்லக்கூடிய மிகவும் அபாயகரமான கட்டத்தை அடைந்துவிடுகிறார்கள்.மேலும் மல்லிப்பட்டிணம் பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய கடல்பகுதியாகும்,சுற்றுலா பகுதியாகவும் இருக்கிறது.
நன்கு விசாலமான பரப்பளவைக் கொண்ட நிலப்பரப்பு,கட்டிட வசதி மற்றும் இன்ன பிற வசதிகளையும் ஒருங்கே பெற்று வடிவமைக்கப்பட்டு கட்டிய கட்டடங்கள் என்பதால் கடற்படை இயங்கி வந்த கட்டிடத்தை அரசு மருத்துவனையாக மாற்றி தரவேண்டும் என்பது பொதுமக்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.