திராவிட இயக்கத்தை அழிக்க யார் யாரோ புதிதாக வந்துகொண்டிருப்பதாகவும், திராவிட இயக்கத்தை தூசிகூட தொட முடியாது என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆட்சியாளர்கள் தங்கள் பதவிக்காக தமிழகத்தின் சுய மரியாதையை, மத்திய அரசிடம் அடகு வைப்பததாக குறை கூறினார். நீதிமன்ற தீர்ப்பு வந்த அடுத்த நாளே, தமிழக அரசு கவிழும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திராவிட இயக்கத்தை அழிக்க சிலர், புதிதாகக் கிளம்பியிருப்பதாக கூறிய மு.க.ஸ்டாலின், திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருப்பதாகவும் கூறினார்.