அதிரை புதுமனைத் தெரு 19வது வார்டு சம்சுல் இஸ்லாம் சங்கம் அமைந்திருக்கும் உட்புற பகுதியில் கடந்த சில வாரங்களாகவே தெரு மின் விளக்குகள் ஆங்காங்கே பழுதாகி கும்மிருட்டாக காட்சியளித்து வருகிறது. இதனால் அப்பகுதில் தொழுகைக்கு செல்பவர்கள், முதியோர்கள், பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதிரையில் இப்படிப்பட்ட இந்த இருள் சூழ்ந்த இடங்களை சில வக்கிரவாதிகள் பயன்படுத்திக் கொண்டு சில பல திருட்டு சம்பவங்களிலும், சில்மிஷங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை உடனடியாக தடுப்பதற்கு தெருவினுள் ஆங்காங்கே பழுதடைந்துள்ள தெரு மின் விளக்குகளை அதிரை பேரூர் நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து அலட்ச்சியப் போக்கை கடைபிடித்து வரும் அதிரை பேரூர் நிர்வாகம் விழித்துக் கொள்ளுமா அல்லது வழக்கம் போல் கண்களை திறந்துக் கொண்டு தூங்குமா என்பதனை பொறுத்திருந்து பாப்போம்..