Wednesday, February 19, 2025

நஷ்டத்தை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும்-முதல்வர்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், “பேருந்துகள் கடும் இழப்பை சந்தித்துள்ளது. பேருந்துகள் மக்களுடையது, இதை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்ற மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவு என்று கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என்றும் வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் கடும் கண்டம் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் பலர் இது குறித்து நியாயப்படுத்தி பேசி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

தமிழகத்தில் 'ஸ்கிரப் டைஃபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள்,...

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும்...

⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள்...

அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின்...
spot_imgspot_imgspot_imgspot_img